சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார் மரணம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் சதீஷ்குமார், கடந்த 2011-ல் காலமானார். காவல் துறைக்கு எதிராக மனித உரிம வழக்குகளை எடுத்து விசாரிப்பதில் பெயர்ப்போன சங்கரசுப்புவின் மகன் மரணம், வழக்கறிஞர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் சதீஷ்குமார் மரணம் கொலையா அல்லது உயிரிழப்பு என்ற மர்மம் நீடித்து வந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது, இந்நிலையில், சதீஷ்குமார் மரணம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ, பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், ‘வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ் குமார் உயிரிழப்பு தான் செய்து கொண்டுள்ளார்,
சதீஷ்குமார் கொலை செய்யப்பட்டார் அல்லது அவரது மரணம் தொடர்பான மர்மம் உள்ளது என்ற எந்த ஒரு ஆதாரமும் இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ அறிக்கையிலும், நிபுணர்களின் கருத்து, சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் சதீஷ்குமார் மனஅழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என குறிப்பிடப்படுள்ளது.
அண்மைச் செய்தி: ‘இலங்கை பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்க?’
சதீஷ்குமார் சட்டம் படித்திருந்தாலும் அவருக்கு அந்த பணியின் மீது நாட்டம் இல்லை மாறாக BPO-வில் பணி புரிய வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்துள்ளது. மேலும், அவரது நடவடிக்கை மற்றும் செயல்கள் சாதாரண நபருக்கானதாக இல்லை என்றும் அவருக்கு ஏற்கனவே “எலக்ட்ரோ கன்குளூசிவ் தெரபி” என்ற சிகிச்சை கூட வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சதீஷ்குமார் தனது தாய், மூத்த சகோதரர் ஆகியோருடன் சுமூக உறவில் இல்லை, மதுப்பழக்கம், புகைப்பழக்கம் அதிகம் இருந்துள்ளது என அந்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.
சி.பி.ஐ-யை பொறுத்தவரை சதீஷ்குமார் மரணம் தொடர்பாக அனைத்து வகையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விசாரணையில் சதீஷ்குமார் மரணத்தில் காவல்துறையினருக்கு தொடர்பு உள்ளது என்று எந்த ஆதாரமும் இல்லை என சொல்லப்பட்டுள்ளது. கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் ஏற்பட்ட காயம் தான் அவரது மரணத்துக்கு காரணம் என மருத்துவ அறிக்கயில் உள்ளதாகவும், சதீஷ்குமாரின் சட்டை பையில் இருந்து ஒரு பகுதி பிளேடும் கண்டெடுக்கப்பட்டுள்ளது, இது தொடர்பாக ஏற்கனவே விசாரணை நீதிமன்றத்திலும் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது என குறிப்பிட்டுள்ள சி.பி.ஐ, இந்த விசாரணையில் சி.பி.ஐ.யை பொறுத்தவரை நீதிதிமன்ற உத்தரவை மதிக்காமலோ, அல்லது மீறவோ செய்யவில்லை என தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு தனது வரம்பை மீறி சி.பி.ஐ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளது என தெரிவித்துள்ள சி.பி.ஐ, மனுதாரர் சங்கரசுப்பு குற்றம்சாட்டியது போல எந்த விவகாரமும் மறைக்கப்படவில்லை, மனுதாரரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சி.பி.ஐ தனது பிரமாணபத்திரத்தில் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








