முக்கியச் செய்திகள் இந்தியா

மலையாள வருட பிறப்பையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு!

மலையாள வருட பிறப்பையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மலையாள வருட பிறப்பு மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 10ம் தேதி மாலை நடைதிறக்கபட்டடுள்ளது. இந்நிலையில், சபரிமலையில் 10ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தினந்தோறும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனையடுத்து நாள் ஒன்றுக்கு 10,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து, மலையாள மொழி பேசும் மக்கள் இன்று விஷு எனப்படும் மலையாள வருட பிறப்பை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 5.30 முதல் ஏழு மணி வரை நடை திறக்கப்பட்டு கனி காணும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, நடைபெற்ற கை நீட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement:

Related posts

சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் டிஜிபி சுணக்கம் காட்டக் கூடாது – ஸ்டாலின்!

Gayathri Venkatesan

தென் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் ராகுல்!

Niruban Chakkaaravarthi

95 % பேர் தடுப்பூசி போடாதவர்கள்: ஆளுநர் தமிழிசை!