இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி லட்டு பிரசாதம் செய்ய உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம் திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி , நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
பின்னர் கூட்டம் முடிந்ததை தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர், கோடை விடுமுறையை ஒட்டி பக்தர்கள் வருகை அதிக இருப்பதால் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் பொருட்களை கொள்முதல் செய்யப்பட்டு அந்த பொருட்களை பயன்படுத்தி லட்டு பிரசாதம் செய்ய ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்க பட்டுள்ளதாக தெரிவித்தார். இயற்கை விவசாய உற்பத்தி பொருட்களை வாங்குவதற்கு விலை பற்றி ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
—-கோ. சிவசங்கரன்







