ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா கோலாகலமாக நடந்தேறியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் தென்திருப்பதி என்றழைக்கப்படுவது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள்…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா கோலாகலமாக நடந்தேறியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் தென்திருப்பதி என்றழைக்கப்படுவது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயில். ஆந்திர மாநில திருப்பதி கோயிலுக்கு செல்ல முடியாவதவர்கள் இங்குள்ள பெருமாளை தரிசித்தால் நன்மை கிட்டும் என்பது ஐதீகமாகும்.

மேலும் இந்த ஆலயத்திற்கு ஆடு,மாடு உள்ளிட்டவற்றை தானமாக வழங்கினால் செல்வம் பெருகும் மக்களின் நம்பிக்கையாக உள்ளது.இத்தகைய சிறப்பு வாய்ந்த இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை பிரமோற்சவ விழா நடப்பது வழக்கம்.

இதனை தொடர்ந்து மலைமீது ஏறி சாமியை தரிசனம் செய்தனர்.விழாவை முன்னிட்டு 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.