கலைக்கல்லூரிகள் அமைப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்குறுது!

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் ராஜபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் ராஜபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், ஒரே ஆண்டில் தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பெற்று தந்துள்ளனர் எனக்கூறினார்.

மேலும் விருதுநகர் மாவட்டத்திற்கு தாம் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்ததாக தெரிவித்த அவர், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் மூன்று மாதங்களில் நான்கு புதிய கலைக்கல்லூரிகள் கொண்டு வரப்படும் என வாக்குறுதியும் அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.