கருணாநிதி மரணத்தில் மர்மம் இருக்கிறது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கருணாநிதி மரணத்தில் மர்மம் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். ராஜபாளையத்தில் அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆர் 104 வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு…

கருணாநிதி மரணத்தில் மர்மம் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜபாளையத்தில் அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆர் 104 வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விரைவில் ராஜபாளையம் மற்றும் திருச்சுழி பகுதியில் அரசு கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். திமுகவும்,காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து தான் முள்ளிவாய்க்காலில் 2 லட்சம் தமிழர்களை படுகொலை செய்தனர். மேலும் கருணாநிதி இறப்பில் மர்மம் இருக்கிறது. அதை நாங்கள் ஆட்சிக்கு மீண்டும் வந்தவுடன் மர்மத்தை வெளிகொண்டு வருவோம் எனவும் பேசினார்

திமுக தலைவர் ஸ்டாலின் இரண்டு மாதத்துக்குள் நாங்கள்தான் ஆட்சி அமைபோம் என்றும், முதல்வர் நான் தான் என பைத்தியம் பிடித்து இருக்கிறார். அவர் நினைத்தால் ஆட்சிக்கு வரமுடியாது. மக்கள் தீர்மானித்து ஓட்டு போட வேண்டும் மக்கள் அனைவரும் அதிமுகவின் இரட்டை இலைக்கு தான் ஓட்டு போட வேண்டும் என தீர்மானித்து விட்டார்கள். அதிமுகவிற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூட இரட்டை இலை சின்னத்தை காண்பித்து தான் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு வருகிறார் என்று பேசிய அவர் முன்னதாக, ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் மற்றும் திமுகவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply