திருச்செங்கோட்டில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பொன்னு கொடுப்பதும், ஓட்டு போடுவதும் ஒன்று தான், எனவே சரியாக வாக்களியுங்கள் என்று கூறி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், சூரியம்பாளையம், சீதாராம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய ஈஸ்வரன், திமுக வெற்றி பெற்றால் குடும்ப தலைவிகளுக்கு மாத ஊதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் இது அடுத்த தேர்தலில் 2 ஆயிரம் ரூபாயாகவும், அதற்கடுத்த தேர்தலில் 5 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார். இது திமுகவின் புரட்சி திட்டம் என்க் கூறி ஈஸ்வரன், வாக்கு சேகரித்தார்.







