மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்த விருதுநகரைச் சேர்ந்த நபரை தேசிய புலனாய்வு முகமை (NIA) போலீஸார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், மலப்புரம் அருகே உள்ள நிலம்பூர் வனப் பகுதியில் வைத்து மாவோயிஸ்ட் அமைப்புகளில் இணைந்து பயிற்சி பெற்ற மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த விருதுநகர் மாவட்டம், தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை அவரது மனைவி ஊரான ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் குடல்புரிநத்தத்தில் வைத்து தேசிய புலனாய்வு முகமை நேற்று கைது செய்தது.
2017 பிப்ரவரியில் கேரள மாநிலம், கோட்டயம் அருகே பூக்கட்டும் பாதம் போலீஸார்
அவரை கைது செய்திருந்தனர். 2019 நவம்பரில் கேரள மாநிலம், விய்யூர் ஜெயிலில் இருந்து பெயிலில் வந்திருந்தார். பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. தற்போது நேற்று அவரைக் கைது செய்து விசாரணைக்காக தேசிய புலனாய்வு முகமை பிரிவு போலீசார் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு பின்தான் கூடுதல் விவரங்கள் தெரியவரும்.
-ம.பவித்ரா







