பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய மக்கள்-கூமாபட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்!

விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டியில் தங்கள் ஊரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு கிராம மக்கள் கல்விச்சீர் வழங்கிய நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாடு தொன்றுதொட்டே கல்வியில் சிறந்து விளங்ககூடிய மாநிலங்களில் ஒன்றாகும். உலகின் முதல்…

விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டியில் தங்கள் ஊரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு கிராம மக்கள் கல்விச்சீர் வழங்கிய நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாடு தொன்றுதொட்டே கல்வியில் சிறந்து விளங்ககூடிய மாநிலங்களில் ஒன்றாகும். உலகின் முதல் மொழியான தமிழில் படித்து தீர்க்க இயலாத அளவிற்கு பல அரிய நூல்கள் உள்ளன. தற்போதைய காலங்களில் வசதியுள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளை தனியார் பள்ளியில் லட்சக்கணக்கில் செலவழித்து படிக்க வைக்கின்றனர். ஆனால் பல குடும்பத்தினரின் குழந்தைகள் கல்விக்காக அரசு பள்ளிகளையே நம்பி உள்ளனர். தமிழகத்தின் பல பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து வந்தாலும், பல தன்னார்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு தேவையான குடம், நாற்காலி,பீரோ உள்ளிட்டவைகளை அவ்வூரை சேர்ந்த கிராம மக்கள் இணைந்து கல்விச்சீராக வழங்கினர்.

கல்விச்சீர் கொண்டு வந்த கிராம மக்கள் பள்ளி ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் நாங்கள் எங்களால் இயன்ற உதவியை பள்ளிக்கு தொடர்ந்து செய்வோம் எனக்கூறினர்.

—-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.