விருதுநகர் | ஸ்கூட்டர் விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து!

விருதுநகரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிலையத்தில் பயங்கர தீவிபத்து ஏற்ப்பட்டு பெரும் பொருட்சேதம் நிகழ்ந்தது. விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக் . அவர் அந்த பகுதியில் ஒரு வாகன விற்பனை நிலையம்…

விருதுநகரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிலையத்தில் பயங்கர தீ
விபத்து ஏற்ப்பட்டு பெரும் பொருட்சேதம் நிகழ்ந்தது.

விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக் . அவர் அந்த பகுதியில் ஒரு வாகன விற்பனை நிலையம் ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்ப்பட்டது . உடனே அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனே வந்த தீயணைப்பு துறையினர் 3 தீயணைப்பு வாகனத்தினை கொண்டு தீயை அனைத்தனர் .

மேலும் அக்கம் பக்கத்தில் உள்ள இடங்களுக்கு தீ பரவாமலும் தடுத்தனர். இந்த விபத்தில் 19 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், 9 பழைய ஸ்கூட்டர்கள் , கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர் உள்ளிட்ட சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரனை மேற்கொண்டு தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மின் கசிவின் காரணமாக இந்த தீ வீபத்து ஏற்ப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.