சையது முஷ்டாக் அலி கோப்பை | சாம்பியன் பட்டம் வென்ற #Mumbai அணிக்கு ரூ.80 லட்சம் பரிசு!

சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு ரூ.80 லட்சம் பரிசாக வழங்குவதாக மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். 17வது சையத் முஷ்டாக் அலி டி20…

Syed Mushtaq Ali Cup | Rs 80 lakh prize for the #Mumbai team who won the title!

சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு ரூ.80 லட்சம் பரிசாக வழங்குவதாக மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

17வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் (டிச.15) நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பை – மத்திய பிரதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது.

மத்திய பிரதேச அணி தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 81 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் ஷர்துல் தாக்கூர், ராய்ஸ்டன் டயஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கிறது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரித்வி ஷா 10 ரன்னில் வெளியேறினார்.

தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 16 ரன்னில் வெளியேறினார். இவர்களை அடுத்து ஆடிய ரகானே 37 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 48 ரன்களிலும் அவுட் ஆகினர். பின்னர் வந்த ஷிவம் துபே 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அதர்வா அன்கோலேகர் மற்றும் சூர்யன்ஷ் ஷெட்ஜ் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினர். இறுதியில் மும்பை அணி 17.5 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியை பாராட்டிய மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் அஜிங்யா நாயக், அணிக்கு ரூ.80 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என நேற்று (டிச.16) அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.