19 அவது ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்குகிறது. இதனை தொடர்ந்து அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி தனது எக்ஸ் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றிருந்த பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியிடம் ’திஸ் ஆர் தட்’ (this or that) கேள்வி கேட்கப்பட்டது.
டி 20 கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த தொடக்க வீரர் யார் என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. முதலில் கில் கிறிஸ்டா அல்லது சுனில் நரேனா என்ற கேள்விக்கு கில் கிறிஸ்ட் என்று பதிலளித்தார்.
அடுத்து கில் கிறிஸ்டா அல்லது டிரேவிஸ் ஹெட்டா என்ற கேள்விக்கு டிரேவிஸ் ஹெட்டை தேர்வு செய்தார். அடுத்து டிரேவிஸ் ஹெட்டா அல்லது விரேந்தர் சேவாககா என்ற கேள்விக்கு அவர் சேவக்கை தேர்ந்தெடுத்தார். அடுத்து வந்த டி காக், ஷேன் வாட்சன், பாஃப் டு பிளசிஸ்,ஷிகர் தவான் சச்சின் ஆகிய கேள்விகளுக்கும் அவர் சேவாக்கின் பெயரையே கூறினார்.
தொடர்ந்து சேவக்கா அல்லது கிறிஸ் கெய்லா என்ற கேள்விக்கு கிறிஸ் கெய்லை தேர்ந்தெடுத்த அவர் கடைசியாக கிறிஸ் கெய்லா அல்லது ரோகித சர்மாவா என்ற கேள்விக்கும் கிறிஸ் கெயில் என்றே பதிலளித்தார்.
மேற்கிந்திய வீரரான கிறிஸ் கெயில் கடந்த 2011 முதல் 2017 வரை பெங்களூரு அணிக்காக விளையாடினார். அவருக்கும் விராட் கோலிக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது என்பது குறிப்படத்தக்கது.







