GOLD RATE | தொடர்ந்து சரியும் தங்கம் விலை ; இன்றைய நிலவரம் என்ன…..?

தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.

தங்கம் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அதன் படி, முன்தினம் சென்னையில் ஆபரணத்தங்கமானது கிராமுக்கு ரூ.140 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,760 -க்கும் சவரனுக்கு ரூ.1,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,18,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

விடுமுறையையொட்டி நேற்றைய தினம் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்த  நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன் படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,710-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,17,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.276-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.