இந்திய கிரிக்கெட் வீரர் விராட்கோலிக்கு இன்று பிறந்த நாளையொட்டி, மெல்போர்னில் சக வீரர்களுடன் அவர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான விராட் கோலி தனது 34 வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். அவர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடி வருகிறார்.
https://twitter.com/BCCI/status/1588784527308005376
இந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன்களை எடுத்த பட்டியலில் விராட்கோலி முதல் இடத்தில் உள்ளார். இந்திய அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவரது பிறந்த நாளை சக வீரர்கள் ஆஸ்திரேலியாவில் இன்று கொண்டாடினர். மெல்போர்னில் விராட்கோலி சக வீரர்களுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியதை பிபிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அணியின் மனநல பயிற்சியாளர் பேடி அப்டனும் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். எனவே, கோலி மற்றும் பேடி அப்டன் ஒன்றாக இணைந்து கேக் வெட்டி சக வீரர்களுக்கு ஊட்டிவிட்டு கொண்டாடினார்கள். பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.
-இரா.நம்பிராஜன்








