தமிழ்நாடு முழுவதும் டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேனி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பிரபாகரன் கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் பயிற்சியில் இருக்கும் ராஜேஸ்வரன் நெல்லை ஜங்சன் சரக உதவி…

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேனி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பிரபாகரன் கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் பயிற்சியில் இருக்கும் ராஜேஸ்வரன் நெல்லை ஜங்சன் சரக உதவி கமினராக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் வினோஜி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக நியமிக்கப்படுகிறார்.

திருவண்ணாமலை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பி ரமேஷ், கள்ளக்குறிச்சி சப்-டிவிஷன் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ரவிக்குமார் கோவை மாநகரம் ஆர்.எஸ்.புரம் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டார். திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஈஸ்வரன், திருப்பூர் மாநகர உளவுத்துறை உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிஎஸ்பி பிரகாஷ், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர் உளவுத்துறை உதவி ஆணையாளர் மணிமேகலை, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சரக டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி மாநகர குற்ற ஆவண காப்பக உதவி ஆணையாளர் கென்னடி திருச்சி கண்டோன்மெண்ட் உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

திருச்சி மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் பாரதி தாசன் திருச்சி மாவட்டம் ஜீயர்புரம் சரக டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள டிஎஸ்பி சகாயஜோஸ், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சரக டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனர் பார்த்திபன், கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சரக டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு அதிரடிப்படை டிஎஸ்பி சுகுமார், கோவை மாநகர சிறப்பு புலனாய்வு பிரிவு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டார். ஆலங்குளம் சரக டிஎஸ்பி பொன்னரசு தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.