வன்முறை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வாகாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி வன்முறை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இதில் யாராவரது காயமடைந்தால், அது நமது தேசத்திற்கான சேதம் என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நலனுக்காக வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறுங்கள் என்றும் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விவசாயிகளிடம் மத்திய அரசு காட்டிய பாரபட்சமான அணுகுமுறையே டெல்லி வன்முறைக்கு காரணம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளிடம் நம்பிக்கை ஏற்பட்ட மத்திய அரசு உடனடியாக 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். அமைதியாக எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளால் உருவாக்கப்பட்ட நல்லெண்ணங்களை, இந்த செயல் பாதிப்படைய செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். உண்ணமையான விவசாயிகள் டெல்லியைவிட்டு வெளியேறி எல்லைகளுக்கு திரும்புமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.