தேங்காய்களை இரு கால்களால் உறித்து முதியவர் அசத்தல்!

ஒரு மணி நேரத்தில் 11 தேங்காய்களை இரு கால்களால் உறித்து அசத்தி முதியவர் சாதனை படைத்துள்ளார். விஞ்ஞான யூகத்தில் தினந்தினம் கண்டுபிடிப்புகள் வெளியாகி வரும் நிலையில், கரூரில் உள்ள கிழக்கு நஞ்சையப்ப தெருவில் வசிப்பவர்…

ஒரு மணி நேரத்தில் 11 தேங்காய்களை இரு கால்களால் உறித்து அசத்தி முதியவர் சாதனை படைத்துள்ளார்.

விஞ்ஞான யூகத்தில் தினந்தினம் கண்டுபிடிப்புகள் வெளியாகி வரும் நிலையில், கரூரில் உள்ள கிழக்கு நஞ்சையப்ப தெருவில் வசிப்பவர் 67 வயதான பாலகிருஷ்ணன். இவருடைய புதிய சாதனை மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிறு வயதிலிருந்தே தேங்காய் உறிக்கும் ஆர்வம் இருந்து வந்துள்ளது. தனது 40வது வயதிலிருந்து தேங்காய் மட்டையை, காலால் உறித்து வருகிறார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் தேங்காய்களை உறித்து காட்டி அசத்தியுள்ளார். பின்னர், கரூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு ஒரு மணி நேரத்தில் 11 தேங்காய்களை இரு கால்களால் உறித்து அசத்தியுள்ளார். இச்செயல் அப்பகுதி மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பலரும் இவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து பாலாகிருஷ்ணன் பேசியதாவது, சாதனை புரிய வயது காரணமில்லை என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply