குற்றலாத்தில் இருதரப்பினரிடையே வன்முறை – ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் காட்சி வைரல்!

சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் ஓருவரை ஒருவர் மாறி மாறி கட்டைகளால் தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. தென்காசி, குற்றாலத்தில் தற்போது சீசன் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள்  ஆனந்த குளியல் போட்டு செல்கின்றனர்.…

சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் ஓருவரை ஒருவர் மாறி மாறி கட்டைகளால் தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
தென்காசி, குற்றாலத்தில் தற்போது சீசன் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள்  ஆனந்த குளியல் போட்டு செல்கின்றனர்.
எனவே அதேபோல் குற்றால ஐந்தருவியில் ஒரு தரப்பினர் குளிப்பதற்காக வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது பார்க்கிங் கட்டணம் செலுத்தமுடியாது என கட்டணம் வசூல் செய்யும் ஊழியர்களிடம் பிரச்னையில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினர்களுக்கிடையே வாக்குவாதம் முற்ற ஒருவரை ஒருவர் மாறி மாறி கட்டைகளால் தாக்கிக்கொண்டனர்.  இந்த சம்பவத்தை அங்கு கூடியிருந்த சுற்றுலா பயணிகள் வீடியோவாக பதிவிட்டனர். அந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.  இச்சம்பவம் குறித்து தகவலறிந்த குற்றாலம் போலீசார் விரைந்து சென்று பிரச்னையில் ஈடுபட்ட நபர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த மாதிரியான சம்பவங்களால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இடையூறுக்கு  ஆளாகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.