விருத்தாசலம் அருகே, மர்ம நபர்கள் விநாயகர் கோயில் உண்டியலை
உடைத்து 50,000 ரூபாயை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் எம் ஆர் கே நகர் பகுதியில் உள்ள விநாயகர்
கோயிலில், ஆண்டுக்கு ஒரு முறை விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் உண்டியலை
திறந்து காணிக்கைகளை கோயில் நிர்வாகம் எடுப்பது வழக்கம். மேலும்,
உண்டியல் நிரம்பிய நிலையில் இன்று கோயில் உண்டியல் திறந்து காணிக்கை
எடுப்பதாக இருந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து உண்டியலில்
இருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு, சில்லறை காசுகளை
அப்படியே சிதற விட்டுச் சென்று விட்டனர். இது குறித்து விருத்தாசலம் காவல்
துறையினர் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து
விசாரணை செய்து வருகின்றனர்.
கு. பாலமுருகன்







