தாயின் அரவணைப்பில் சந்தோசமாக இருக்கும் மைனர் குழந்தைகளை, தந்தையின் கட்டுப்பாட்டில் அனுப்பினால், குழந்தைகளின் வாழ்வில் சமநிலையின்மையை உருவாக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தியாவில் மனைவியிடம் உள்ள குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரி அமெரிக்காவில் உள்ள கணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கல்வி, வாழ்வு, சமுதாயம் ஆகியவற்றில் முன்னேற்றம் காணும் வகையில், குழந்தைகளை அமெரிக்கா அழைத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு மனைவி தரப்பில், அமெரிக்காவிலிருந்து வந்து குழந்தைகளை சந்தித்து, தன் பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றுவந்து கொண்டிருக்கிறார். மகள் சென்னையிலேயே சர்வதேச பள்ளியில் படிக்கிறார். இரு குழந்தைகளையும் கணவனுடன் அனுப்ப முடியாது இவ்வாறு மனைவி தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, 12 வயது சிறுமி போதுமான விவரம் அறிந்தவராகவும், அக்காவின் பிணைப்பிலேயே இருக்கும் 2 வயது குழந்தை சுட்டிப்பையனாகவும் இருப்பதாக நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
அதோடு, தங்களது எதிர்காலத்தின் மீது தாய், தந்தை இருவரும் அக்கறை கொண்டுள்ளதை 12 வயது சிறுமி உணர்ந்திருக்கிறார். தந்தை மீதும் பாசமாக உள்ளார். பள்ளி இறுதி படிப்பை தற்போதைய பள்ளியிலேயே முடிக்கவும், உயர் கல்விக்கு வேண்டுமானல் அமெரிக்கா செல்லவும் சிறுமிக்கு விருப்பம் உள்ளது. இவ்வாறு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா கூறினார்.
மேலும், தாயின் அரவணைப்பில் சந்தோசமாக இருக்கும் மைனர் குழந்தைகளை தந்தையின் கட்டுப்பாட்டில் அனுப்பினால், குழந்தைகளின் வாழ்வில் சமநிலையின்மையை உருவாக்கும் எனக்கூறி மனைவியிடம் உள்ள குழந்தைகளை ஒப்படைக்க கோரிய அமெரிக்காவில் உள்ள கணவனின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.