சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே அழகமானகரியில் நேற்று நள்ளிரவில் இரண்டு பேர் கோழி, ஆடுகளை திருட வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கிராம மக்கள் அவர்களை விரட்டி பிடித்து தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மதகுபட்டி காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த இருவரும் SS கோட்டை அருகே உள்ள கல்லம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் விக்னேஷ் என்பதும் தெரியவந்தது. ஆடு, கோழி திருட வந்த இருவரை கிராம மக்கள் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







