சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் கிராமியக் கலை நிகழ்ச்சிகள்

சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில், 75-வது சுதந்திர தின கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் எனச் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியச் சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடிடும் வகையில் சென்னை…

சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில், 75-வது சுதந்திர தின கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் எனச் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியச் சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடிடும் வகையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையத்துடன் இணைந்து மதுரை கலைமாமணி தி.சோமசுந்தரம் குழுவினரின் பல்வேறு கிராமியக் கலை நிகழ்ச்சிகள் மெட்ரோ இரயில் நிலையங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த கிராமியக் கலை நிகழ்ச்சிகளில், கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், தப்பாட்டம், மற்றும் நையாண்டி மேளம் போன்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகள் பின்வரும் தேதிகளில் மெட்ரோ இரயில் நிலையங்களில் நடத்தப்படவுள்ளது. மேலும், இந்த கிராமியக் கலை நிகழ்ச்சிகளைச் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதிர்வேதி தொடங்கி வைக்கிறார்.

அண்மைச் செய்தி: ‘‘பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார்; தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார்’ – பிரதமர் மோடிக்குக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதில்’

ஆகஸ்ட் 12 அன்று புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திலும், ஆகஸ்ட் 13 அன்று விம்கோ நகர் மெட்ரோ இரயில் நிலையத்திலும், ஆகஸ்ட் 14 அன்று கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்திலும், ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று அசோக் நகர் மெட்ரோ இரயில் நிலையத்திலும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெறும் இந்த கிராமியக் கலை நிகழ்ச்சிகளைப் பொதுமக்கள் கண்டு மகிழச் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.