25.5 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

காயத்திலிருந்து குணமடைந்த ‘விக்ரம்’ – மீண்டும் தொடங்குகிறது ‘தங்கலான்’ படப்பிடிப்பு!

தங்கலான் படப்பிடிப்பின்போது நடிகர் விக்ரமுக்கு ஏற்பட்ட காயம் குணமடைந்த நிலையில் வரும் 15-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்கும் திரைப்படம் தங்கலான். பெரும் பொருட்செலவில் உருவாகும் இத்திரைப்படத்தை ஸ்டியோ கீரின் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது. இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ, ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது. தங்கலான் திரைப்படம், கோலார் தங்க வயல் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை பற்றி விவரிப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு 50% நிறைவடைந்த நிலையில், இதற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. படப்பிடிப்பு ஒத்திகையின்போது நடிகர் விக்ரமிற்கு காயம் ஏற்பட்டு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ள விக்ரம் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார். அதன்படி, படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் இந்த மாதம் 15-ம் தேதி தொடங்குகிறது எனவும், மொத்தம் 12 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. ’தங்கலான்’ படம் அடுத்த ஆண்டு திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி.. பிரபல நடிகை புகார்!

Gayathri Venkatesan

தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கும் தடுப்பூசி தட்டுப்பாடு

ஓணம் பண்டிகை; ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

G SaravanaKumar