நடிகர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 24 மணி நேரத்தில் Followers-களின் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், ப்ரியா ஆனந்த், கௌதம் வாசு தேவ் மேனன், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் இப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி அங்கு நடந்த மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். விரைவில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வ கணக்கை நேற்று தொடங்கினார். அக்கவுண்டை தொடங்கியதும் அவரது புகைப்படத்தை பதிவிட்டு,‘‘ஹாய் நண்பா, நண்பிஸ்” என பதிவிட்டிருந்தார். அவரது இந்தப் புகைப்படம் 24 மணி நேரத்தில் 4 மில்லியன் லைக்குகளைப் பெற்றது.
மேலும், 99 நிமிடத்தில் நடிகர் விஜய் 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ளார். இதன்மூலம் உலக அளவில் இன்ஸ்டாகிராமில் அதிகவேகமாக 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றவர்கள் பட்டியலில் நடிகர் விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது வரை விஜய்க்கு இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்ஸ்களின் எண்ணிக்கை 5 மில்லியன் (50 லட்சம்) என்பது குறிப்பிடத்தக்கது.







