தென் மண்டல ஐஜியாக இருந்த பிரேம் ஆனந்த் சின்கா பதவி உயர்வு பெற்று ஆவடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து காலியாக இருந்த அப்பொறுப்பிற்கு சென்னை கூடுதல் கமிஷனரான விஜேந்திர பிதாரி நியமிக்கப்பட்டார். அதன் படி இன்று புதிய தென்மண்டல ஐஜியாக விஜயேந்திர பிதாரி பதவியேற்றுக்கொண்டார்.
தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், அனைத்து தென்மாவட்டங்களுக்கு சென்று காவல் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி மாவட்ட பிரச்னைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கு, தீவிர குற்றங்களில் குற்றப்பத்திரிக்கை விரைவாக தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கந்துவட்டி பிரச்னைகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க குறைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.







