திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, “ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் இன்று! அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த்க்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க! என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “தமிழ்த் திரைத்துறை ஆளுமையும், தேமுதிக நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மறைந்த அன்புச் சகோதரர் “பத்ம பூஷன்” விஜயகாந்தின் பிறந்த நாளான இன்று, அவர் தம் கலைத்துறைச் சாதனைகளையும் பொதுவாழ்வில் அவர் தமிழக மக்கள் மீது காட்டிய பேரன்பையும் நினைவுகூர்கிறேன்; மண்ணை விட்டு மறைந்தாலும், ‘கேப்டன்’ என்ற பெயரும், உங்கள் புகழும் காலம் கடந்து நிலைத்திருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தே.மு.தி.கநிறுவன தலைவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் தின் பிறந்த நாள் இன்று! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீது அளவற்ற அன்பும் – கழகத்தலைவருடன் நெருங்கிய நட்பும் கொண்டிருந்தவர். ஏழை எளிய மக்களின் நலனுக்காக களத்தில் இறங்கி உழைத்த மனிதநேயர் அண்ணன் கேப்டன் அவர்களின் பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்! அவர் புகழ் ஓங்கட்டும்!, என்று அவர் பதிவிட்டுள்ளார்.
திமுக எம்.பி கணிமொழி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், திரையுலகில் தொடங்கி அரசியலிலும் தனக்கெனத் தனிப் பாதையை உருவாக்கிப் பயணித்தவர் கேப்டன் விஜயகாந்த். கலைஞர் அவரின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவராகத் திகழ்ந்தவர். கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரிடமும் அன்பு காட்டிய பண்பாளர் என்று புகழாரம் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் கூறியிருபதாவது, “ திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்து, தனது துணிச்சல், நேர்மை, எளிமை மற்றும் மனிதநேயத்தால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். அரசியலிலும் தனது தனித்துவமான பயணத்தின் மூலம் மக்கள் நலனுக்காக குரல் கொடுத்து, எளிய மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவராகத் திகழ்ந்தார். அவரது உழைப்பும், மனிதநேயமும், மக்கள் மீதான அக்கறையும் என்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.




