கன்னியாகுமரியில் இளைஞர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என கன்னியாகுமரி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல்பாலையில் திறந்த வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து ஈந்திகாலை, அண்டுகோடு, மேல்புறம், கழுவன் திட்டை, குழித்துறை வெட்டு, வெந்நி காப்புகாடு, மாராயபுரம் ,முன்சிறை ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், கன்னியாகுமரியில் இளைஞர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்து வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விஜய் வசந்த் வாக்குறுதி அளித்தார்.







