தொடரும் இஞ்சுரி சோகம் ; சென்னை அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் விலகல்…!

சென்னை அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை அணியின் மிகப்பெரிய பிரச்னையாக இஞ்சுரி இருந்து வருகிறது. தொடருக்கு முன்னதாக ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் நாதன் எல்லீஸ் தொடரில் இருந்து விலகினார். அதெ போல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்த ஆயுஷ் மாத்ரே, கலீல் அகமது ஆகியோரும் அடுத்தடுத்து காயம் ஏற்பட்டு தொடரில் இருந்து விலகினர்.

அதே போல் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் தசைப்பிடிப்பு காரணமாக இதுவரை எந்த போட்டியிலும் விளையாடவில்லை.

இறுதியாக வேகப்பந்து வீச்சாளர் ராமகிருஷ்ண கோஷ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக மெசினில் ஹாட்லி நொரொன்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

இந்த சூழலில் தற்போது சென்னை அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை அணி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “ஜேமி ஓவர்டனிற்கு வலது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது; இதனால் சிகிச்சைக்காக அவர் இங்கிலாந்திற்கு திரும்பவுள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு சீசனில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஜேமி ஓவர்டன் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி 136 ரன்கள் எடுத்து சென்னை அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக விளங்கி வருகிறார். அவரின் டெத் ஓவர் பந்து விச்சு மற்றும் அதிரடி பேட்டிங் ஆகியவை அணியின் வெற்றிக்கு இன்றியமையாததாக இருந்து.

சென்னை அணி 2026 ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் இரண்டாம் பாதியில் தனது சிறப்பான ஆட்டத்தால் ப்ளேஆஃப் ரேசில் சென்னை அணி முன்னேறிக்கொண்டுள்ளது. இந்த சூழலில் ஜேமி ஓவர்டனின் விலகல் சென்னை அணிக்கு பெரும்பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.