பிற்பகல் 3 மணி நிலவரப்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட 6 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்களுக்கு, மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1,374 வார்டுகளுக்கும், நகராட்சி பகுதியில் 3,843 வார்டுகளுக்கும், பேரூராட்சி பகுதியில் 7,621 வார்டுகளுக்குமான தேர்தல் கடந்த 16ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. தற்போது வரை வெளியாகியிருக்கும் தீர்ப்புகளின்படி திமுக பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி முன்னிலையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த தேர்தலில் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கம் வாக்கு எண்ணிக்கையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன் விவரம்
பின்வருமாறு;
- இராணிப்பேட்டை மாவட்டம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வாலாஜாபேட்டை நகராட்சி 3வது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் பூக்கடை மோகன்ராஜ் வெற்றி
பெற்றுள்ளார். - நாமக்கல் குமாரபாளையம் நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேல்முருகன் வெற்றி பெற்றுள்ளார்.
- தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி பேரூராட்சி 14 வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்ட பி. வேல்மயில் வெற்றி பெற்றுள்ளார்.
- விருதுநகர் மாவட்டம் தென் கொடிக்குளம் பேரூராட்சி 5 வது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் ராஜசேகரன் வெற்றி பெற்றுள்ளார்.
- புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர் பர்வேஷ் வெற்றி பெற்றுள்ளார்.
- விழுப்புரம் மாவட்டம் கோட்டைக்குப்பத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், இந்த வெற்றியை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.







