முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை, ராயபுரம் பகுதியில், கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், வரும் மார்ச் 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அண்மைச் செய்தி: விஜய் மக்கள் இயக்கத்தின் ஒரு விரல் புரட்சி – 6 வார்டுகளில் வெற்றி
இதைத்தொடர்ந்து ஜெயக்குமார் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது, அதனை வரும் 23-ஆம் தேதி விசாரிப்பதாக கூறி நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். அதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த பாபு முருகவேல், இந்த வழக்கு ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்காக உள்ளது என்றும், ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையை வைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








