முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அக்டோபர் மாதத்திற்கு பிறகு தடுப்பூசி முறையில் மாற்றம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அக்டோபர் மாதத்திற்கு பிறகு தடுப்பூசி முறையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் 2,000 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், தி.நகரில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், இதுவரை, 5 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு மெகா தடுப்பூசி முகாம் மூலமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்றார். இரண்டு தவணை தடுப்பூசிகளும் 90% தாண்டி உள்ளது. ஆனால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 20% கூட தாண்டவில்லை.

அதனால், மக்கள் விழிப்புணர்வுடன் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும். இந்த மாதம் இறுதிக்குள் இன்னும் ஒரு மெகா முகாம் மட்டுமே நடத்த முடியும். எனவே பொதுமக்கள் தயக்கம் காட்டாமல் தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும். அக்டோபர் மாதத்திற்கு பிறகு தடுப்பூசி போடும் முறையில் மாற்றம் ஏற்பட உள்ளது.
அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் 12 முதல் 14 வயதில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கே சென்று தடுப்பூசி செலுத்த உள்ளோம்.

1044 பேருக்கு influenza காய்ச்சல் மூலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 68 பேர் மருத்துவமனையில் உள்ளனர். மீதம் உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டனர். மேலும், கொரோனா தடுப்பூசியோடு சேர்த்து 13 வகையான தடுப்பூசி அக்டோபர் முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை செலுத்தப்படும் என்றார்.

தடுப்பூசிகள் புதன்கிழமை தோறும் போடப்படும். அடுத்த மாதம் முதல் பூஸ்டர் இலவசமாக போட முடியுமா என்பது ஒன்றிய அரசு தான் கூற வேண்டும். மெகா தடுப்பூசி முகாம் வரும் 25-ஆம் தேதி நிறைவடைகிறது. காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும். நோயின் தன்மை குறித்து ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிட வேண்டும் என சாடினார். இந்த மாதம் 30-ம் தேதி வரை இலவச பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்தார்.

-பவானி பால்பாண்டி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதிய சென்சார் கட்டுப்பாடுகள்: கொந்தளிக்கும் திரைத்துறையினர்

Halley Karthik

சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்; சென்னையில் கடும் போக்குவரத்து

G SaravanaKumar

சட்டவிரோதமாக செயல்பட்டுள்ள ஓஎன்ஜிசி நிறுவனம்: ஜெயராமன் குற்றச்சாட்டு

Halley Karthik