வலிமையில் விக்னேஷ் சிவன்?

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தில் விக்னேஷ் சிவன் பணியாற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  விஸ்வாசம் திரைப்படத்திற்கு பிறகு, அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கிய “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் வெளியானது. பிங்க்…

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தில் விக்னேஷ் சிவன் பணியாற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஸ்வாசம் திரைப்படத்திற்கு பிறகு, அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கிய “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் வெளியானது. பிங்க் எனும் இந்தி திரைப்படத்தின் ரீமேக்கான இத்திரைப்படம், அஜித்தின் வழக்கமான கமர்சியல் பாணியில் இருந்து விலகி, அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் வித்தியாசமான திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படம் பெரும் ஹிட் அடித்த நிலையில், அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் அடுத்த திரைப்படத்திற்கு கைகோர்த்தது. அஜித்தின் 60-வது திரைப்படமான இப்படத்திற்கு “வலிமை” என பெயரிடப்பட்டுள்ளதாக, 2019 அக்டோபர் 18-ம் தேதி அறிவிப்பு வெளியானது. அதுதான், இத்திரைப்படம் குறித்து படக்குழுவினர் அஜித் ரசிகர்களுக்கு கொடுத்த கடைசி அப்டேட்.

அதன் பின்னர், கிட்டதட்ட 632 நாட்களாக படத்தின் அப்டேட் கிடைக்காமல் அஜித் ரசிகர்கள் தவித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று ( ஜூலை 12 ) வலிமையின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. இது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது, என்றே கூறவேண்டும். இந்நிலையில், இயக்குநரும், பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன், அஜித்தின் வலிமை படத்தில் பணியாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் இப்படத்தில் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விக்னேஷ் சிவன் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு பாடல் எழுதியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.