அசாம் வீரப்பன் சகாக்களால் சுட்டுக்கொலை

அசாம் வீரப்பன் என அழைக்கப்பட்ட அசாம் மாநிலத்தின் ஐக்கிய மக்கள் புரட்சி முன்னணியின் தலைவர் மங்கின் கல்ஹாவ், அமைப்புக்குள் ஏற்பட்ட மோதலில் அவரது சகாக்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அசாமின் தெற்கு மலைப்பகுதிகளில் பதுங்கிருந்த…

அசாம் வீரப்பன் என அழைக்கப்பட்ட அசாம் மாநிலத்தின் ஐக்கிய மக்கள் புரட்சி முன்னணியின் தலைவர் மங்கின் கல்ஹாவ், அமைப்புக்குள் ஏற்பட்ட மோதலில் அவரது சகாக்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அசாமின் தெற்கு மலைப்பகுதிகளில் பதுங்கிருந்த ஐக்கிய மக்கள் புரட்சி முன்னணியின் தலைவர் மங்கின் கல்ஹாவ், சந்தன மரங்கள் உள்ளிட்ட அரிய வகை மரங்களை வெட்டிக் கடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளாக இந்த அமைப்பின் பல்வேறு மூத்த தலைவர்கள் பல்வேறு என்கவுண்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் சில தலைவர்கள் போலீசிடம் சரண் அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு கெங்பிபுங் பகுதியில் ஐக்கிய மக்கள் புரட்சி முன்னணிக்குள்கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஒருவருக்கு ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். மங்கின் கல்ஹாவ் மீது அவரது சகாக்கள் சராமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்த தை அடுத்து அங்கு சென்ற போலீசார் மங்கின் கல்ஹாவின் உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஐக்கிய மக்கள் புரட்சி முன்னணியின் தளபதியாக கருதப்பட்ட மார்ட்டின் குயிட்டி என்பவர் கடந்த ஆண்டு ஆக்டோபரில் சிங்ஹாசன் மலைப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போதில் இருந்தே இந்த அமைப்பு வலுவிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

அசாம் முன்னாள் முதல்வர் சபர்பானந்தா சோனாவாலுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த அமைப்பின் மூத்த தலைவர்கள் அனுப்பிய கடித த்தில் பலர் சரண் அடைய தயாராக இருப்பதாக கூறியிருந்தனர். அதன் படி பல தலைவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரண் அடைந்தனர். இப்போது அந்த அமைப்பின் தலைவரும் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய மக்கள் புரட்சி முன்னணி இயக்கம் முடிவுக்கு வந்து விட்டதாக அசாம் போலீசார் தெரிவித்தனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.