வேகப்பந்து வீச்சாளராக தாயாரே காரணம்-ஐபிஎல் நட்சத்திர வீரர் உம்ரான் மாலிக்

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் உம்ரான் மாலிக். ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த 1999ம் ஆண்டு பிறந்தவர் உம்ரான். தற்போது அவருக்கு 22 வயது ஆகிறது. மிகச் சிறப்பாக பந்துவீசும்…

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் உம்ரான் மாலிக்.

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த 1999ம் ஆண்டு பிறந்தவர் உம்ரான். தற்போது அவருக்கு 22 வயது ஆகிறது. மிகச் சிறப்பாக பந்துவீசும் திறன் கொண்டவர். ஜம்மு-காஷ்மீர் அணிக்கா விளையாடி வருகிறார். ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்ற அவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கடந்த ஆண்டு எடுத்தது. இந்த ஆண்டும் அவரை தக்க வைத்துக் கொண்டது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை
எடுத்த அசத்தினார்.

150 கி.மீ.-க்கும் அதிகமான வேகத்தில் பந்துவீசும் திறமைப் படைத்த உம்ரான் மாலிக், தனது குடும்பத்தினரின் ஆதரவால் தான் இந்த இடத்துக்கு முன்னேறி வந்திருப்பதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:
நான் தொடக்கம் முதலே வேகமாக பந்துவீசுவதையே விரும்பினேன். நான் இளம் வயதில் இருந்தபோது, பிளாஸ்டிக் பந்தில் விளையாடினேன். வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துவிட்டு திட்டு வாங்குவேன். இருந்தாலும், எனது தாயார் விளையாட வேண்டாம் என்று கூறியதில்லை. மாறாக, விளையாடி, ஜன்னல் கண்ணாடிகளை உடை என்று கூறுவார் என்று தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.