விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தியுடன் வந்ததாக சுரேஷ்
மற்றும் விக்னேஷ் ஆகியோரை கடந்த 18ஆம் உதவி ஆய்வாளர் தலைமையிலான தலைமைச் செயலக காலனி போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது விக்னேஷிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு சந்தேகமான முறையில் உயிரிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வலிப்பு வந்து விக்னேஷ் உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட
நிலையில், போலீஸார் தாக்கியதன் காரணமாகவே விக்னேஷ் உயிரிழந்ததாக குடும்பத்தார்
தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், விக்னேஷை காவல் துறையினர் துரத்திச்
சென்று தாக்கும் சி.சி.டி.வி. காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன்ராஜ்,
ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம்
செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிபிசிஐடி இந்த வழக்கு விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், விக்னேஷ் மரணம் குறித்து தினத்தந்தி நாளிதழில் ஏப்ரல் 20இல்
வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
ஆணையத் தலைவர் எஸ்.பாஸ்கரன் விசாரணைக்கு எடுத்துள்ள இந்த வழக்கு குறித்து 4
வாரங்களில் சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய
உத்தரவிட்டுள்ளார்.