இன்ஸ்டாவில் வீடியோ: மனைவியை தாக்கிய கணவன்

இன்ஸ்டாகிராமில் வேறு ஒரு நபருடன் சேர்ந்து வீடியோ வெளியிட்ட மனைவியை, ஆத்தி்த்தில் கணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரம் என்எம்கே தெருவைச் சேர்ந்தவர் சாலமன். இவருக்கு திருமணமாகி ஈஸ்வரி என்ற…

இன்ஸ்டாகிராமில் வேறு ஒரு நபருடன் சேர்ந்து வீடியோ வெளியிட்ட மனைவியை,
ஆத்தி்த்தில் கணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம் என்எம்கே தெருவைச் சேர்ந்தவர் சாலமன். இவருக்கு திருமணமாகி ஈஸ்வரி என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. ஈஸ்வரி இன்ஸ்டாகிராமில் சினிமா பாடல்களுக்கு ஏற்ற வகையில் நடனம் ஆடி வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். நாளடைவில் வேறு ஒரு ஆணுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் சினிமா பாடல் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பலமுறை சாலமன் ஈஸ்வரியிடம் எச்சரித்துள்ளார். ஆனால் தொடர்ந்து ஈஸ்வரி வேறு ஒரு நபரோடு சேர்ந்து சினிமா பாடல்களுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராமில் வீடியோக்களாக வெளியிட்டு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு இருவருக்கும் இடையே மீண்டும் வீடியோ தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த சாலமன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவியின் இடது கை மற்றும் தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டியுள்ளார். ஈஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த அயனாவரம் போலீசார், சாலமனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.