முக்கியச் செய்திகள் உலகம் தொழில்நுட்பம்

ஒரே இரவில் குறைந்த Follower’s; என்னதான் ஆச்சு முகநூலுக்கு?

விதிமுறைகளை அதிகபடுத்தியதா பேஸ்புக்? பேக் ஐடிக்களை முடக்குகிறதா பேஸ்புக்? தொழில்நுட்ப கோளாறா? ஒரே இரவில் குறையும் Follower’s; என்னதான் ஆச்சு முகநூலுக்கு?

பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக், மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கிவருகிறது. உலகம் முழுவதும் 2.85 பில்லியன் பயனாளிகள் ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். 2008 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், நான்கே ஆண்டுகளில் அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கை உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற செய்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தகவல் தொடர்பை மிகவும் எளிமையாக்கி நாட்டின் எல்லைகளைத் தாண்டி பலரை இணையத்தின் மூலம் இணைத்த பெருமை ஃபேஸ்புக் தளத்தைச் சேரும். இப்படி இருக்க ஃபேஸ்புக் நிறுவனம் சமீப காலமாகப் பல இன்னல்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது. இதனால் மார்க் தனது சொத்து மதிப்பில் சுமார் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளார். இதனால் போர்ப்ஸ் அமெரிக்காவின் முதல் 10 பணக்காரர் பட்டியலிலிருந்து, வெளியேறி 11வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

இதற்கெல்லாம் மேலாக மார்க் ஜுக்கர்பெர்க்கிற்குச் சொந்தமான சமூக ஊடகதளம் மெட்டா, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக மாஸ்கோ நீதிமன்றம் குற்றம்சாட்டியிருக்கிறது. ரஷ்யா, உக்ரைனுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு மேலாகப் போர் நடந்து வரும் நிலையில் அவ்வப்போது ரஷ்யாவுக்கு எதிராகவும், உக்ரைனுக்கு ஆதரவாகவும், சமூக வலைத்தளங்களில் பல கருத்துகளும், செய்திகளும் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.

இதனால் ரஷ்ய அரசு கடந்த மார்ச் மாதத்தில் ரஷ்ய நாட்டுக்கு எதிராக அவதூறு செய்திகள் பரப்புவதாக ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களுக்குத் தடைவிதித்தது.இந்நிலையில் மெட்டா நிறுவனம் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக மாஸ்கோ நீதிமன்றம் குற்றம்சாட்டியிருப்பதால் பல விதிமுறைகளை அதிகப்படுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை முகநூலை திறந்த பலருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு லட்சம் பாலோவர்கள் வைத்திருந்தவர்கள் உள்பட அனைவருக்கும் குறைந்த வெறும் 9,000 என்ற எண்ணிக்கையே காட்டியது. ஒரு நாளுக்கு இத்தனை ஆயிரம் பாலோவர்கள் குறைந்துவிட்டனரா என அதிர்ச்சியடைந்த பயனர்கள் மார்க்கிடம் முறையிடத் தொடங்கினர்.  ஆனால், அந்த மார்க்குக்கே பாலோவர் குறைந்திருந்ததால் மேலும் அதிர்ச்சியடைந்தனர். மார்க்கின் பக்கத்தை 100 மில்லியன்க்கும் அதிகமானோர் பின்தொடரும் நிலையில், இப்போது 9 ஆயிரம் பேர் மட்டுமே பின்தொடர்வதாகக் காண்பிக்கிறது.

இதற்கு காரணம் இது நமது கைப்பேசியோ அல்லது கணினி பிரச்சனையோ அல்ல. பேஸ்புக் புதிய அப்டேட்டிற்காக சில திருத்தங்கள் கொண்டு வரப்படவுள்ளன. இந்த அப்டேட் விரைவில் வெளியாகி இந்த அனைத்து குழப்பங்களும் தீர்ந்துவிடும் எனத் தொழில் நுட்ப அறிஞர்கள் கூறுகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முகக்கவசம் அணியாத 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு! – காவல்துறை அதிரடி

Gayathri Venkatesan

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வழக்கு; நீதிமன்றம் உத்தரவு

G SaravanaKumar

’ஒன்றரை வருட ஆட்சியில் ஒன்றரை லட்சம் மின் இணைப்புகள்’ – முதலமைச்சர் பெருமிதம்

EZHILARASAN D