நாமக்கல் குமாரபாளையத்தில் சாலையின் நடுவே மது போதையில் ஒருவர் சாமி பாடலுக்கு பரதநாட்டியம் ஆடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
நாமக்கல் குமாரபாளையத்தில் சேலம் செல்லும் சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு மது அருந்திய ஒருவர் அளவுக்கு அதிகமான மது போதையில் சாமி பாடலுக்கு பரதநாட்டியம் ஆடும் வீடியோ வைரலாக பரவிவருகிறது. இந்தசூழலில், தொடர்ந்து மது அருந்தியவர்கள் போதையில் செய்யும் ரகளை, அப்பகுதியைக் கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, குமாரபாளையத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையால் இது போன்ற சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. இதனைத் தடுக்க, குமாரபாளையம் காவல்துறையினர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேபோன்று, மது போதையில் முதியவர் ஒருவர் சாலை நடுவே உள்ள தடுப்பில் அமர்ந்து மது அருந்தும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
—சௌம்யா.மோ






