மணாலியில் கதவுகளை திறந்தவாறு காரை ஓட்டிச் செல்லும் வீடியோ வைரல்!

மணாலியில் வாகன நெரிசல் மிகுந்த சாலையில் கதவைத் திறந்து கொண்டு காரை ஓட்டிச் சென்ற நபர் குறித்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகி கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தை…

மணாலியில் வாகன நெரிசல் மிகுந்த சாலையில் கதவைத் திறந்து கொண்டு காரை ஓட்டிச் சென்ற நபர் குறித்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகி கடும் கண்டனம் எழுந்துள்ளது.

ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மணாலியில்,  ஓடும் காரில் இரண்டு பேர் ஆபத்தான சாகசம் செய்வதோடு பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியவாறும் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  அந்த வீடியோவில் முன்பக்க கதவுகள் இரண்டும் திறந்த நிலையில் டிரைவர் காரை ஓட்டுவதை வீடியோவில் காணலாம்.

இந்நிலையில்,  இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலானதை அடுத்து குலு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  மேலும் போக்குவரத்து சட்டத்தின் கீழ் அந்த வாகனத்திற்கு எதிராக காவல் துறை அபராதம் விதித்துள்ளது.

இது தொடர்பாக குலு போலீஸார் ஃபேஸ்புக்கில் அபராத ரசீதின் படத்தைப் பகிர்ந்திருக்கிறது.  அதில் கதவுகளை திறந்தவாறு மணாலி பகுதியில் காரை ஓட்டிச் சென்றவர்களுக்கு போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் ரூ.3500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  மணாலி பகுதியில் பதிவு செய்யப்பட்டு வைரல் ஆன இந்த வீடியோ டிசம்பர் 24 அன்று X தளத்தில் பகிரப்பட்டது.  அப்போதிலிருந்து 4.5 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.  அதோடு 1,300 க்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துகளையும்,  கோபத்தையும் பதிவு செய்துள்ளனர்.

அதில் ஒரு தனி நபர்,  “இந்த காரின் ஆர்சியை ஏன் நிரந்தரமாகத் தடை செய்யக் கூடாது?” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தை (NHAI) டேக் செய்து ஒரு நபர் பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர்,  “ரூ.3.5 ஆயிரம் அபராதம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.  ஒருவேளை பெட்ரோல் விலையை கூட ஈடுகட்ட முடியாது.  கவனக்குறைவாக நடந்து கொண்டதற்காக வாகனத்தை பறிமுதல் செய்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.  இது போன்ற சட்டங்களை கொண்டு வருவதற்கான நேரம் இது. என்று பதிவிட்டுள்ளார்.

“இந்தியாவில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் இதுபோன்ற தொல்லைகளைக் கண்காணிக்க ஒரு பைக் சார்ஜென்ட் இருக்க வேண்டும்,” என்று மூன்றாவது நபர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.