விடாமுயற்சி படத்தின் Sawadeeka பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
மங்காத்தா திரைப்படத்திற்கு பின் அஜித், த்ரிஷா மற்றும் அர்ஜுன் இணைந்து நடித்திருக்கும் படம் விடாமுயற்சி. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த, Sawadeeka பாடலை ஆண்டனிதாசன் பாடியிருக்கிறார்.
நேற்று, பாடல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்த நிலையில் சவதீகா(Sawadeeka)’ பாடல் இன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது வரவேற்பை பெற்று வருகிறது.







