தமிழகம் செய்திகள்

விவசாயத்தில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்களுக்கு வெற்றி தமிழர் விருது – ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத்தில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கௌவரவப்படுத்தும் நோக்கத்தில் திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் லட்சுமி காந்தன் வெற்றி தமிழர் விருதுகளை அவர்களுக்கு வழங்கினார்.

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத்தில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்களை
தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் விருதுகள் வழங்கும் விழா
திருவாரூர் சீமாட்டி சில்க்ஸ் சார்பில் நடைபெற்றது. இந்த வெற்றி தமிழர் விருது
வழங்கும் நிகழ்வு திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமி காந்தன்
தலைமையில் நடைபெற்றது‌.

இதில் பல்வேறு தொழில்களில் பணிபுரிந்து மீண்டும் விவசாயத்திற்கு திரும்பி பாரம்பரியத்தை மீட்க முயற்சி எடுத்து வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆய்வு செய்து விவசாயத்தில் தீவிரமாக ஈடுபடும் பட்டதாரி இளைஞர்களை கண்டறிந்து வெற்றி தமிழர் விருது வழங்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தற்போது முதல் கட்டமாக 15 இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வெற்றித் தமிழர் விருதுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து விவசாயத்தை காப்பவர்களுக்கு உரிய வகையில் மரியாதை செய்து கௌரவப்படுத்தப்படுவார்கள் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் சீமாட்டி சில்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆசிப் அலி மற்றும் அப்ரார் அகமது, தமிழக இயற்கை உழவர்கள் இயக்கம் வரதராஜன் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

-அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கால்நடை மருத்துவப் படிப்புகள் – அக்.3 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Web Editor

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Halley Karthik

நுகர்பொருள் வாணிபக் கழகம் தனியார் மயமாகிறதா? ஜி.கே.வாசன் எதிர்ப்பு

Web Editor