நீலகிரியில் கால்நடைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் -தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கோடை காலத்தில் முதுமலைப் புலிகள் காப்பகப் பகுதியிலுள்ள பல்வேறு வன விலங்குகளால் வெளி மண்டல வனப் பகுதிகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கால்நடைகளுக்கான சிறப்புத் தடுப்பூசி முகாம்…

கோடை காலத்தில் முதுமலைப் புலிகள் காப்பகப் பகுதியிலுள்ள பல்வேறு வன விலங்குகளால் வெளி மண்டல வனப் பகுதிகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கால்நடைகளுக்கான சிறப்புத் தடுப்பூசி முகாம் இன்று தொடங்கியது.

நீலகிரி மாவட்டம் முதுமலைப் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டல
வனப்பகுதிகளில் அமைந்துள்ள பத்துக்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் விவசாயம்
மற்றும் கால்நடைகளைப் பராமரிப்பது ஆகியவை பொது மக்களின்
பிரதானத் தொழிலாக உள்ளது.

இந்நிலையில் முதுமலைப் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இவ்வன விலங்குகளால் வெளி வட்டப் பகுதிகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கால்நடைகளுக்கான சிறப்புத் தடுப்பபூசி முகாம் இன்று தொடங்கியது.


மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த முகாம் மூலம் ஆணைகட்டி, மசினகுடி, மாயார்,
மாவனல்லா, பொக்காபுரம், வாழைத்தோட்டம், சொக்கநள்ளி, சிறியூர் உள்ளிட்ட
கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்குத் தடுப்பு ஊசிப் போடப்படுகிறது.

இந்த முகாமில் வனச்சரக அலுவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் நான்கு
குழுக்களாக இணைந்து தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர். புலிகள் காப்பக
வெளிவட்ட பகுதியில் உள்ள கால்நடை உரிமையாளர்கள் தவறாமல் இந்த முகாமில்
பங்கேற்று தங்களது கால்நடைகளைத் தொற்றுப் பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.