வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு – முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து!

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமை தாங்கினார்.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தின் இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க முடியும். அதனடிப்படையில் தவெக அரசு பெறுப்பேற்று இது வரைக்கும் ரூ.1,02,514 கோடி முதலீடுகளுக்கான 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கொண்டு வந்துள்ளது .

இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டு புதிய நிறுவனங்களோடு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். இந்த மாநாட்டில், 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.67,452 கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன. 1 லட்சத்து 6 ஆயிரத்து 998 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. இதன் மூலம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும். 1 லட்சத்து 21 ஆயிரத்து 788 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. தொடர்ந்து முதலமைச்சர் விஜய் ஒவ்வொரு முதலீட்டாளர்களிடமும் நிறுவனங்களின் தேவைகள் குறித்தும் வேலைவாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.