மூத்த தமிழறிஞர் சத்தியசீலன் காலமானார்

சொல்லின் செல்வர் என போற்றப்பட்ட மூத்த தமிழறிஞர் சோ. சத்தியசீலன் வயது முதிர்வு காரணமாக காலமானார். பேராசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், சொற்பொழிவாளர், வர்ணனையாளர், தொகுப்பாளர் என பன்முகத்தன்மையுடன் விளங்கியவர் சத்தியசீலன். பள்ளி ஆசிரியராக தனது…

சொல்லின் செல்வர் என போற்றப்பட்ட மூத்த தமிழறிஞர் சோ. சத்தியசீலன் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

பேராசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், சொற்பொழிவாளர், வர்ணனையாளர், தொகுப்பாளர் என பன்முகத்தன்மையுடன் விளங்கியவர் சத்தியசீலன்.

பள்ளி ஆசிரியராக தனது பணியை தொடங்கிய இவர், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று தமிழ் பணியாற்றியவர். மேலும், வள்ளலார் குறித்து இவர் பேசிய தொகுப்பு ஆறு ஒலிநாடாக்களாக வெளிவந்துள்ளன. இதுமட்டுமன்றி 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் மூன்று நூல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

தமிழ்நாடு அரசின் கலைமாமணி, சொல்லின் செல்வர் விருதுகளை பொற்றுள்ளார். திருச்சியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.