திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை நமீதா சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகை நமீதா, தனது நடிப்பில் தயாராகியுள்ள “பாவ் பாவ்” திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக தெரிவித்தார்.
தியேட்டரில் வெளியாகும் என நினைத்திருந்த நிலையில், ஓடிடியில் வெளியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் “நமீதா தியேட்டர்” என்ற ஓடிடி செயலியை தொடங்க உள்ளதாகவும், நமீதா பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருப்பதாகவும் கூறிய நமீதா, அதற்காகவே சாமி தரிசனம் செய்ய வந்ததாகவும் தெரிவித்தார்.







