முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் தேர்வு: ஏ.கே.ராஜன் குழுவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராயும் ஏ.கே.ராஜன் குழுவுக்கு, அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க அரசு முடிவுசெய்துள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து, கடந்த ஜூன் 10ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. ஏ.கே.ராஜன் குழுவுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் நான்கு முறை குழு கூடி ஆய்வு செய்துள்ளது.

இதுவரை 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துக்களை குழுவிடம் வழங்கி உள்ள நிலையில், 90% பணிகளை ஏ.கே.ராஜன் குழு நிறைவு செய்துள்ளது. இதனிடையே பாஜக தொடர்ந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இருப்பதால் அறிக்கை தாக்கல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஏ.கே.ராஜன் குழுவுக்கு வழங்கப்பட்ட அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், கூடுதல் அவகாசம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

வெள்ளத்தில் மூழ்கிய வெனிஸ்; மக்கள் அவதி!

Jayapriya

இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி

Ezhilarasan

சமூகவலைதளத்தில் வைரலான எமிரேட்ஸ் விளம்பர படம்

Jeba Arul Robinson