மூச்சுத் திணறல்: பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி

மூச்சுத் திணறல் காரணமாக பிரபல மூத்த நடிகர் கைகலா சத்ய நாராயணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கைகலா சத்ய நாராயணா. 86 வயதான இவர், தெலுங்கில் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.…

மூச்சுத் திணறல் காரணமாக பிரபல மூத்த நடிகர் கைகலா சத்ய நாராயணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் கைகலா சத்ய நாராயணா. 86 வயதான இவர், தெலுங்கில் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வில்லன், குணசித்திரம் உட்பட பல்வேறு வேடங்களில் நடித்துள்ள இவர், தமிழில் கமல்ஹாசனின் பஞ்சதந்திரம் படத்தின் ஸ்ரீமனின் மாமனாராக நடித்துள்ளார். ’பெரியார்’ படத்தில் பெரியாரின் தந்தையாகவும் நடித்திருந் தார். கடைசியாக 2019 ஆம் ஆண்டு வெளியான மகேஷ்பாபுவின் ’மகரிஷி’ படத்தில் நடித்திருந்தார்.

இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குணமடைந்து திரும்பிய அவருக்கு இன்று மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை யில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் நிலைக் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள், நடிகர்கள் சமூக வலை தளத்தில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.