பிரமாண்ட இயக்குநர் ராஜமவுலி, இந்தி நடிகர் சல்மான் கானை மும்பையில் இன்று சந்தித்தார்.
’பாகுபலி’ படங்களுக்கு பிறகு இயக்குநர் ராஜமவுலி இயக்கும் படம், இரத்தம் ரணம் ரெளத்திரம் (ஆர்ஆர்ஆர்). இதில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். மற்றும் சமுத்திரக்கனி, இந்தி ஹீரோ அஜய் தேவ்கன், நடிகை ஆலியா பட், ஸ்ரேயா உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படம் வரும் ஜனவரி மாதம் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. மெகா பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள, ஜப்பான், சீன மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தின், ரிலீஸுக்கு முந்தைய விழா துபாயில் நடக்க இருப்பதாகக் கூறப்படு கிறது. படத்துக்கு வட இந்தியாவில் பிரமாண்ட விளம்பரம் தேவைப்படுவதால், அதற்கான ஏற்பாடுகளில் ராஜமவுலி ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், பாலிவுட் ஹீரோ சல்மான் கானை மும்பை பிலிம் சிட்டியில் ராஜமவுலியும் அவர் மகன் கார்த்திகேயாவும் இன்று சந்தித்தனர். விழாவுக்கு அவரை அழைப்பதற்காக இந்தச் சந்திப்பு நடந்திருக்கலாம் என்று கூறப்படு கிறது.
ராம் சரண் தேஜாவுக்கு நெருக்கமானவரான சல்மான் கான் சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.








