இந்தியா, இஸ்ரேல் இணைந்து தயாரித்த ஏவுகணையின் சோதனை வெற்றி!

இந்தியா, இஸ்ரேல் இணைந்து தயாரித்த ஏவுகணையின் சோதனை வெற்றியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் ஏரோஸ்பேஸ் நிறுவனம் மற்றும் இந்தியாவின் DRDO இணைந்து அதிநவீன MRSAM ஏவுகணை ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்த ஏவுகணை 50-70 கி.மீ…

இந்தியா, இஸ்ரேல் இணைந்து தயாரித்த ஏவுகணையின் சோதனை வெற்றியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் ஏரோஸ்பேஸ் நிறுவனம் மற்றும் இந்தியாவின் DRDO இணைந்து அதிநவீன MRSAM ஏவுகணை ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்த ஏவுகணை 50-70 கி.மீ வேகத்தில் இலக்கை தாக்கும் திறன் வாய்ந்தது. இதன் சோதனை கடந்த வாரம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரேல் நாட்டு ராணுவம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இரு நாட்டு ராணுவத்தாலும் இந்த ஏவுகணை பயன்படுத்தப்படவிருக்கிறது.

இந்திய ராணுவம் சார்பில் அவ்வப்போது புதிய ஏவுகணைகளின் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு கட்டங்களாக இந்த சோதனைகள் நடைபெறுகின்றன. நிலப்பரப்பில் இருந்து வான்வெளியில் தாக்குதல் நடத்துவதில் MRSAM ஏவுகணை சிறப்பாக செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இரு நாடுகளின் பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்த வாய்ப்பாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply