நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவை தேர்தலையடுத்து அதிமுக தலைமை மீது நிலவிய அதிருப்தி காரணமாக மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), சத்தியபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தநிலையில், அவர்களது ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை விசாரிகும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளனர்.




